வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல், 63 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
Published on

கடந்த 13ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு, கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல், அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு உள்ள அய்யனார் கோயில் மைதானத்தில் வைக்கப்பட்ட துரைக்கண்ணு உடலுக்கு,

அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் அவருடையை உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது வன்னியடி தோட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, கொரோனா நெறிமுறைகள் படி, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com