பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை
Published on
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதம் விரைவில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு துறை வாரியாக, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையொட்டி உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில், 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள், உயர்அலுவலர்கள் பங்கேற்றுள்ள ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மானிய கோரிக்கையின் போது புதிய அறிவிப்புகளை வெளியிடுவது தொடர்பாக கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது .புதிய கல்லூரிகள், பாட திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com