Minister Anand | அமைச்சர் சரத்துக்கு கேக் ஊட்டிய அமைச்சர் ஆனந்த்
அமைச்சர் ஆனந்த் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் சென்னை ஈசிஆர் கானத்தூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்தின் பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் தினகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், என்.ஆனந்த் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடியதோடு, அங்கு திரண்டிருந்த மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சரத், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
