Thoothukudi | ஒரே நேரத்தில் கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள் - போட்டி போட்டு அள்ளிய மீனவர்கள்

ஒரே நேரத்தில் கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள் - போட்டி போட்டு அள்ளிய மீனவர்கள்

Thoothukudi | ஒரே நேரத்தில் கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான பேச்சாளை மீன்கள் - போட்டி போட்டு அள்ளிய மீனவர்கள் #thoothukudi #fish #thanthitv தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் சிங்கத்துறை கடற்கரையில், லட்சக்கணக்கான பேச்சாலை மீன்கள் கரை ஒதுங்கின. வழக்கம்போல் மீன்பிடிக்கச் செல்லத் தயாரான மீனவர்கள், கடற்கரை முழுவதும் மீன்கள் கொட்டிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே பத்து நாட்களுக்கு முன்பு மணப்பாடு கடற்கரையிலும் ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கிய நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடலில் நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் மீன்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் என மீனவர்கள் கருதுகின்றனர். எனவே, மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மீன்கள் கரை ஒதுங்குவதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

X