விக்கிரமசிங்கபுரம், நெல்லை||ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள் முன் விஷமருந்திய பால் வியாபாரி உயிரிழப்பு

ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள் முன் விஷமருந்திய பால் வியாபாரி உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில், வீட்டை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள் முன்பு விஷமருந்திய பால் வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது வீட்டை நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 29ஆம் தேதி அதிகாரிகள் ஜப்தி செய்ய வந்தனர். அப்போது மன உளைச்சலில் இருந்த ராமசாமி, அதிகாரிகள் முன்னிலையில் விஷமருந்தித் தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து, நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது மனைவி சரஸ்வதி, அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமசாமியின் உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com