2 தனியார் நிறுவனங்களின் பால், தயிர் விலை மீண்டும் உயர்வு | Milk
தமிழ்நாட்டில் விற்பனையாகும் திருமலா, ஜெர்சி நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த திருமலா நிறுவனம் பிப்ரவரி 1 முதல் விலை உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஜெர்சி நிறுவனம், வருகிற 3ஆம் தேதி முதல் விலை உயர்வை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. பால் விலை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி இருந்தாலும், தமிழக அரசின் 'ஆவின்' நிறுவனம் பால் விலையை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
