Milk | Rate| "பால் விலையில் மாற்றம்... அதிர்ச்சியில் மக்கள்"

x

ஒருமாத இடைவெளியில் மீண்டும் தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழக அரசு தலையிட வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிரின் விற்பனை விலை உயர்வு அமலுக்கு வந்த நிலையில், தற்போது பாலுக்கான விலை 4 ரூபாயும், தயிர் கிலோவுக்கு 3 ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கபடுவார்கள் என்று கூறியுள்ள பால் முகவர்கள், உயர்த்தப்படும் பால் விலையை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்