நச்சுத் தன்மை இல்லாத பால் உற்பத்திக்கு தரமான கால்நடை தீவனத்தை மானிய விலையில் வழங்க அரசு முன் வர வேண்டும் என பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், தமிழகத்தில் உற்பத்தியாகும் பாலில் அதிகளவு நச்சுத் தன்மை இருப்பது மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது ஓரளவுக்கு உண்மை தான் என்றார். இதனை தடுக்க கறவை மாடுகளுக்கு தரமான தீவனத்தை மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும், பாலின் நச்சுத் தன்மையை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.