தமிழ்நாட்டில் கொத்தடிமைகளாக வடமாநிலத்தவர்.. திடுக்கிட வைக்கும் செய்தி
பூந்தமல்லி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் 48 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பூந்தமல்லி அடுத்த வயலா நல்லூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வட மாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக வந்த புகாரின் அடிப்படையில்,
திருவள்ளூர் மாவட்ட சட்ட உதவி மையத்தின் செயலாளர் நளினி தேவி நடத்திய ஆய்வில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய செங்கல் சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
