Salem Attack Viral Video | நள்ளிரவில் அடிதடி - செங்கல், கட்டையால் தாக்குதல்.. அதிர்ச்சி காட்சிகள்

நள்ளிரவில் அடிதடி - செங்கல், கட்டையால் தாக்குதல்.. அதிர்ச்சி காட்சிகள்

#Salem #Attack #ViralVideo #TNPolice #ThanthiTV

Salem Attack Viral Video | நள்ளிரவில் அடிதடி - செங்கல், கட்டையால் தாக்குதல்.. அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே குறிஞ்சிநகர் பகுதியில் இரு இளைஞர் கும்பல்களுக்கு இடையே நள்ளிரவில் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீலநாயக்கன்பட்டி கோவில் பண்டிகையின்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. அப்போது, செங்கல் மற்றும் கட்டைகளைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதுடன், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர். மேலும், ஒரு கும்பல் மற்றொரு தரப்பினர் வந்த வாகனத்தைத் தூக்கிச் செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், அருண் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com