காலை உணவுத் திட்டம்-தொடக்கக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை
விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவுத்திட்டம் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.. அதில் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளும் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் பயன்பெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், பள்ளிகள் ஏதேனும் விடுபட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களே முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
