நடுக்காவேரி சம்பவம் - பெண் காவல் ஆய்வாளர் மீது என்ன நடவடிக்கை?
தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரியில், காவல் நிலையம் முன்பு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவத்தில், பெண் காவல் ஆய்வாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. பொறியியல் பட்டதாரி கீர்த்திகாவை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பெண் ஆய்வாளர் ஷர்மிளா மீது எந்தெந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது? கீர்த்திகா குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க எடுத்த நடவடிக்கை என்ன? என்று சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மே 15ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
