மைக் செட் உரிமையாளர் கொலை - சிறுவன் உட்பட 3 பேர் கைது
ராஜபாளையம் அருகே முன் விரோதம் காரணமாக மைக் செட் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மலையடிப்பட்டி காமராஜர்புரத்தை சேர்ந்த சோலைராஜ் என்பவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதனால், தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், முத்துலிங்கம், பெருமாள்சாமி மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
