கடல் கடந்து காதல் - மெக்சிகோ பெண்ணை கரம் பிடித்த தமிழர்
காதல் திருமணம் செய்து கொண்ட மெக்சிகோ நாட்டு பெண்ணுக்கும், தமிழக இளைஞருக்கும், இந்துமுறைப்படி திருமண வரவேற்பு நடைபெற்றது. நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் கஸ்பா பகுதியை சேர்ந்த இசக்கிமுத்துவும், மெக்சிகோவை சேர்ந்த வழக்கறிஞர் அசுவாணி லோபெஸும் (Azuani Lopez) கடந்த 6 ஆண்டுகலாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் மெக்சிகோவில் திருமணம் நடைபெற்ற நிலையில், இந்துமுறைப்படி சொந்த ஊரில் திருமண வரவேற்பு நடைபெற்றது. கோவிலில் சாமி தரிசனம் செய்த மணமக்கள், வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்களுடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.
Next Story
