மேட்டூரில் குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

மேட்டூர் அடுத்த ஆண்டிகரையைச் சேர்ந்தவர் வல்லரசு (26) கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீபிரியா (22) கரும்புச்சாறு விற்பனை கடை நடத்தி வருகிறார்.

இவர்களுக்கு மைவிழி (4 .5) தர்ஷன் (1.5)என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். மனைவி ஸ்ரீ பிரியா விற்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் ஸ்ரீ பிரியா மேட்டூர் ராஜகணபதி நகரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல நேற்று வல்லரசு மேட்டூர் ராஜகணபதிநகரில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்தார். நேற்று இரவு வல்லரசு தனது இரு குழந்தைகளுடன் தனி அறையில் தூங்க சென்றார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் மனைவி ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீ பிரியாவின் தாயார் வெண்ணிலா ஆகியோர் கதவை பலமாக தட்டிப் பார்த்தனர். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துப் பார்த்தனர். இரண்டு குழந்தைகளும் துப்பட்டாவில் வீட்டின் இரும்பு சட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். கட்டிடத் தொழிலாளி வல்லரசு தனது மனைவியின் சேலையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். வல்லரசு தனது குழந்தைகளை கொலை செய்து தூக்கிட்டு பின்னர் தான் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மூன்று சடலங்களையும் மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மாமியார் வீட்டில் மருமகன் குழந்தைகளை கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இறந்து போன சம்பவம் மேட்டூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது."

X

Thanthi TV
www.thanthitv.com