கிடுகிடுவென குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து... அதிர்ச்சியில் விவசாயிகள் | Mettur Dam

கிடுகிடுவென குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து... அதிர்ச்சியில் விவசாயிகள் | Mettur Dam
Published on

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 3 மாதத்துக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட போது நீர்மட்டம் 103 அடியாக இருந்த நிலையில் தற்போது கிடுகிடுவென குறைந்து 45.66 அடியாக உள்ளது.

இதற்கிடையே, கர்நாடக அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு, நேற்று மாலை முதல் குறைக்கப்பட்டது. அணைக்கு நீர் வரத்து 4 ஆயிரத்து 987 கன அடியாக இருந்தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 479 கனஅடியாக அதிகரித்தது. அணையில்இருந்து பாசனத்துக்காக 6 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

X

Thanthi TV
www.thanthitv.com