மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் பத்தாயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணை, சுரங்க மின் நிலையம் மற்றும் ஏழு கதவணை மின் நிலையங்களில் 218 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 100 புள்ளி 18 அடியாகவும், நீர் இருப்பு 65 புள்ளி 74 டி.எம்.சியாகவும் உள்ளது. அனைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து இரண்டு கன அடியாக உள்ளது.