Mettupalayam|Nilgiri |குலைநடுங்கவிட்ட வீடியோ.. காரின் sunroof-ல் நின்றபடி பயணத்துக்கு தடை? -டிமாண்ட்
மேட்டுப்பாளையம் பகுதியில், குழந்தைகள் உள்ளிட்டோர் காரின் sunroof-ல் நின்றபடி பயணிக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். சமீபத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் கார் சன்ரூபில் வேடிக்கை பார்த்து சென்று கொண்டிருந்த ஒரு சிறுவன் சாலையில் இருந்த உயர கட்டுப்பாட்டு தடுப்பு கம்பி தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில், மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், குழந்தைகளுடன் ஆபத்தை உணராமல் இவ்வாறு செல்வதால், ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களை தடுப்பதற்காக, காரின் sunroof-ல் நின்றபடி பயணிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
