2-வது மெட்ரோ ரயில் திட்டப் பணி : மாநில அரசு திட்டமாக மாற்றம்

எதிர்பார்த்த அளவு பயணிகள் இல்லாததால், சென்னையில் செயல்படுத்தப்படவுள்ள இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இருந்து மத்திய அரசு விலகியுள்ளது.

* சென்னையில் செயல்படுத்தப்பட்ட முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை, மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து நிறைவேற்றின.

* ஆனால், தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அதனால், அந்த திட்டம் முழுக்க முழுக்க தமிழக அரசின் திட்டமாக மாறியுள்ளது.

* பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே, மத்திய அரசு ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதன் பின்னணி என தெரிகிறது.

* சென்னையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் பேர் பயணிப்பார்கள் என தமிழக அரசு அறிக்கை அளித்திருந்தது. ஆனால் தற்போது வரை 30 ஆயிரம் பேர் மட்டுமே பயணிக்கின்றனர்.

* இதனிடையே, இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கான நிதியை தமிழக அரசு கேட்டபோது, வருவாய் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியது.

* இதையடுத்து, திட்டத்தை தமிழக அரசின் திட்டமாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து ஜப்பான் அரசுடன் தமிழக அரசு நேரடியாக ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

* ஒப்பந்தத்தில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனைத்து மூலப் பொருட்களையும் ஜப்பானில் இருந்தே பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிகிறது.

2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிக்கு ஏற்படும், நிதி சுமையை தமிழக அரசால் சமாளிக்க முடியும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி திட்டத்திற்கு, தமிழக அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com