`மெத்..' சென்னையை அதிர வைத்த டாக்டர் - அடுத்தடுத்து பகீர் தகவல்

சென்னை அரும்பாக்கம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக டாக்டர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரும்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த அந்தோணி ரூபன், தீபக்ராஜ், ஆகிய இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 14 புள்ளி 2 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணம் , செல்போன்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இமானுவேல் ரோஹன், அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகியோரை கைது செய்ததன் தொடர்ச்சியாக 27 வயதாகும் ஈஸ்வரை கைது செய்தனர். விசாரணையில் ஈஸ்வர் ரஷ்யாவில் MBBS படித்து முடித்துவிட்டு, சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் Claim மருத்துவராக பணிபுரிந்து வருவதும், இவர் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com