ஆலங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களுக்கான காப்பகத்தில், 17 வயது சிறுமி தங்க இசக்கி, உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், 4 நாட்களாக இருட்டறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி சூடு வைத்து சித்ரவை செய்யப்பட்டதை கேள்விபட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். சிறுமியை கொடுமைப்படுத்திய காப்பக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.