வெளி உலகை பார்த்து மகிழ்ந்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தினர்...

மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வரப்பட்ட மனநோயாளிகள்.
வெளி உலகை பார்த்து மகிழ்ந்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தினர்...
Published on
சென்னை கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் இருந்து மனநோயாளிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நலம் பாதிக்கப்பட்ட 90 பேரை தனியார் தொண்டு நிறுவனம் மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக காப்பகத்தில் இருப்பவர்கள் வெளியுலகை பார்க்கும் வகையில், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. மாமல்லபுரம் வந்தவர்கள் அங்கிருந்த கல் சிற்பங்கள், கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்டவற்றை பார்த்து மகிழ்ந்ததோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com