பஸ்ஸில் பெண்கள் சீட்டில் இனி ஆண்கள் உட்கார கூடாது - வெளியான அதிரடி உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்துகளில்பெண்களுக்கு ஒதுக்கபட்ட இருக்கைகளில் பெண்கள் மட்டுமே அமர வேண்டும் ஆண்கள் அமர கூடாது எனவும் மாற்று திறனாளி இருக்கையிலும் வேறு நபர்கள் அமரக்கூடாது என உதகை கோட்ட போக்குவரத்து கழக பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார்.கடந்த மாதம் அரசு பேருந்தில் பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த 4 மாத கர்ப்பிணியின் அருகே அமர்ந்த ஆண் பயணியால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து கர்ப்பிணி பெண் அளித்த புகாரின் பேரில் உதகை கோட்ட பொது மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Next Story