தீவிரவாதிகளுக்கு உதவியதாக இதுவரை 10 பேர் கைது -தமிழக க்யூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

தீவிரவாதிகளுக்கு உதவியதாக இதுவரை 10 பேரை தமிழக க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு உதவியதாக இதுவரை 10 பேர் கைது -தமிழக க்யூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை
Published on

2014ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கு மற்றும் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆள் சேர்த்தாக தேசிய புலனாய்வு நிறுவனத்தால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த இரண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் காஜா மொய்தீன், சையது அலி நிவாஸ் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் கடந்த நவம்பர் மாதத்தில் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தலைமறைவானார்கள். இவர்களுக்கு உதவியதாக பெங்களூரை சேர்ந்த முகமது ஹனீப்கான், இம்ரான்கான், முகமது சையது ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இஜாஸ் அகமது என்பவரும் உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்த நிலையில், அவரை கடந்த 14ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன், ராஜேஷ், சேலத்தில் அப்துல் ரகுமான், அன்பரசன், லியாகத் அலிகான் உள்ளிட்டோரையும் கைது செய்தனர். இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக தகவல் பரப்பியதாக தேங்காய்பட்டணம் பகுதியை சேர்ந்த நவாஸ் சாகுல் என்பவரை புதுக்கடை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com