களைகட்டிய மயான கொள்ளை திருவிழா..! கோயிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் | Melmalayanur
விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிவனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கப்பட்டதாக கூறப்படும் புராணக் கதையை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படும் இந்த மயானக் கொள்ளை விழாவில், சூறையாடல் நிகழ்வு பிரசித்தி பெற்றதாகும்.
பல்வேறு காய்கறிகள், பழங்கள், தானியங்கள் உள்ளிட்டவற்றை அங்காளம்மன் கோயில் அருகே உள்ள மயானத்தில் சூறையிட்டு, வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது. இதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
