Megamalai | மேகமலை புலிகள் காப்பகத்திற்கு எதிராக 13 கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு

Megamalai | மேகமலை புலிகள் காப்பகத்திற்கு எதிராக 13 கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு

மேகமலை புலிகள் காப்பகத்திற்கு எதிராக 13 கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக விரிவாக்கத்திற்கு எதிராக, தேனியில் வருசநாடு உள்ளிட்ட 13 கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட‌து. மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மலை கிராம மக்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து, நரியூத்து, மேகமலை, வருசநாடு உள்ளிட்ட கிராமங்களில் நடந்த கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட‌து. நரியூத்து ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வனத்துறைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க மறுத்ததால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து செல்வதாக கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதான முயற்சியில் ஈடுபட்ட‌தை தொடர்ந்து, தீர்மான மனுவை ஊராட்சி நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com