மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்கள் இருநாட்களாக இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக 54 லட்சத்து 40 ஆயிரத்து 710 ரூபாய் பணம் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் உண்டியலில் 274 கிராம் தங்கம் மற்றும் 220 கிராம் வெள்ளியுடன் வெளிநாட்டு ரூபாய் 195 நோட்டுகள் இருந்தன.