மீனாட்சி அம்மன் கோவில் கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெறுகிறது - சுந்தரவடிவேல், ஆலய பாதுகாப்பு குழு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில் இடிந்த வீர வசந்தராயர் மண்டபம் கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெறுவதாக ஆலய பாதுகாப்பு குழு குற்றஞ்சாட்டி உள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெறுகிறது - சுந்தரவடிவேல், ஆலய பாதுகாப்பு குழு
Published on

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில் இடிந்த வீர வசந்தராயர் மண்டபம் கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெறுவதாக ஆலய பாதுகாப்பு குழு குற்றஞ்சாட்டி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, இந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில துணைத்தலைவர் சுந்தரவடிவேல், அறநிலை துறை அமைச்சர், கோவில் தக்கார் என யாரும் சிரத்தையோடு பணிகளை செய்யவில்லை என புகார் கூறினார். இதனால் பக்தர்கள் மனவேதனையுடன் உள்ளதாகவும், பணிகளை துரிதப்படுத்தி மீனாட்சி அம்மன் கோவில் வசந்த மண்டபத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com