Medical Waste | மீண்டும் கேரள கழிவுகளா? தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ... கொதிக்கும் மக்கள்
Medical Waste | மீண்டும் கேரள கழிவுகளா? தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ... கொதிக்கும் மக்கள்
மீண்டும் கேரள கழிவுகளா? தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ... கொதிக்கும் மக்கள்
நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி காட்டுப்பகுதியில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டித் தீ வைத்த விவகாரத்தில், சிவந்திபட்டி போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் லாரிகள் மூலம் கழிவுகள் எரிக்கப்பட்டதால், கரும்புகை சூழ்ந்து அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்த நிலையில், அங்கு டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே திடியூர் மற்றும் சேரன்மகாதேவி பகுதிகளில் இதுபோன்று கேரளக் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இச்சம்பவம் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
