

சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் ஆயிரம் போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் நபருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.அங்கு பணியாற்றிய 30 பேர் உடனடியாக நோய்த்தொற்று பரிசோதனை செய்துகொண்டனர். நாளொன்றுக்கு 50 முதல் 100 காவலர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கிறார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன