மருத்துவ மாணவர் திடீர் மரணம் - உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை கொரோனா வார்டில் பணியாற்றிய மருந்துவர் லோகேஷ் குமார் திடீரென உயிரிழந்தார்.

மேட்டூர் வனவாசியை சேர்ந்தவர் மருத்துவர் லோகேஷ் குமார். 24 வயதான இவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு முதுகலை மருத்துவம் படித்து வந்தார். கொரோனா அலுவலில் இருந்து தனிமைப்படுத்தும் விதமாக கடந்த 14ஆம் தேதி தியாகராயநகரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென விடுதியில் வாந்தி எடுத்த நிலையில் மருத்துவர் லோகேஷ் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து விடுதிக்கு விரைந்த போலீசார், மருத்துவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவரின் திடீர் மரணம், சக மருத்துவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com