கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறிய மெடிக்கல் கடைக்காரர்- கைது செய்த போலீஸ்

x

கிருஷ்ணகிரி அருகே கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறி வந்த மெடிக்கல் கடைக்காரர் கைது செய்யப்பட்டார். இதில் தப்பி ஓடிய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். காவேரிப்பட்டிணம் பகுதியில் மெடிக்கல்ஸ் வைத்திருப்பவர் பாலமுரளி. இவரது மெடிக்கலில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் தலைமையில், மருத்துவ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த இருவர் தப்பி ஓடிய நிலையில் குழந்தையின் பாலினம் கண்டறியும் கருவி உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அனைத்துமருத்துவ உபகரணங்களையும் பறிமுதல் செய்து, மெடிக்கலுக்கு சீல் வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்