மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை - புதிய அறிவிப்பு..

vமருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, ரீ - அலாட்மென்ட் மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில ஒதுக்கீட்டிற்கான மருத்துவ படிப்பு சேர்க்கை கலந்தாய்வு முதல் சுற்று முடிந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 119 எம்பிபிஎஸ் காலியிடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் இடங்கள் 648 இடங்கள் மீதம் இருக்கின்றன. ரீ அலாட்மென்ட்- 2 ம் சுற்று கலந்தாய்வுக்காக 21ஆம் தேதி முதல், 22 வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 31-ம் தேதி இதற்கான ரிசல்ட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com