

ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் போதும், சேர்க்கைக்கு பிறகும் இட ஒதுக்கீடு வாரியாக நிரம்பிய இடங்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அது போன்ற எந்த ஒரு விபரங்களும் தற்போதுவரை வெளிப்படையாக வெளியிடப்பட வில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க மறுத்து வருகின்றனர். கலந்தாய்வு முடிந்து, கல்லூரி துவங்கி இரண்டு மாதம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வரை மாணவர்களின் விவரங்கள் வெளியிடாதது ஏன்? என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள சுமார் 6 ஆயிரம் மாணவர்களில் 90 சதவீதம் பழைய மாணவர்கள் என்பதாலேயே, சேர்க்கை விவரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.