"தமிழக அரசு பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு" - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்

தமிழக அரசு பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
"தமிழக அரசு பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு" - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்
Published on

தமிழக அரசு பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்,. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இருமொழி கொள்கையே கடைபிடிக்கப்படும் என்று ஒப்புக்காக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள தமிழக அரசு, பாஜக அரசின் இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு துணைபோய்க்கொண்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்,. மேலும், தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்க மத்திய அரசு உதவித்தொகை வழங்குவதாகவும், தகுதியுள்ள மாணவர்கள் பட்டியலை தயாரித்து , அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்,. ஊக்கத்தொகை என்ற பெயரில் நிதி உதவி செய்து, தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை புகுத்த நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாடு அரசு இசைவு அளித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com