MDMK | MLA | தனியார் வேலைவாய்ப்பு முகாம் - புறக்கணித்த மதிமுக MLA.. திடீர் சலசலப்பு

x

தனியார் வேலைவாய்ப்பு முகாம் - புறக்கணித்த மதிமுக எம்.எல்.ஏ. தென்காசி புளியங்குடியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், மதிமுகவை சேர்ந்த வாசுதேவநல்லூர் MLA சதன் திருமலைக்குமார், பங்கேற்காதது கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. சதன் திருமலைக்குமார் வருவதற்கு முன்பாகவே, திமுக மாவட்டச் செயலாளரும், சங்கரன்கோவில் MLA-வுமான ராஜா, பணி நியமன ஆணையை வழங்கிவிட்டு சென்றுவிட்டார். பின்பு அங்கு வந்த சதன் திருமலைக்குமார் திமுக MLA-க்கள், தன்னை புறக்கணித்து விட்டதாக கூறி, காரைவிட்டு இறங்காமலேயே சென்றுவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்