மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் 10நாட்கள் நடைபெறும் - மருத்துவ கல்வி இயக்குனரகம்

மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று தொடங்கியது

முதல் நாளான இன்று மாற்றுத் திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு மட்டும் நடைபெறுகிறது. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு, கலந்தாய்வில் பங்கேற்க 53 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விளையாட்டு பிரிவை பொறுத்த வரை 8 இடங்களுக்கு 40 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒத்துக்கப்பட்டு உள்ள 11 இடங்களுக்கு 30 மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com