Mayiladuthurai | "போராட்டத்தில் இறங்குவோம்" - வேதனையை கொட்டி கொதிக்கும் மயிலாடுதுறை மக்கள்
மயிலாடுதுறையில் உள்ள திடல் தெரு பகுதியில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருப்பதால் சிறுவர்கள் விழும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி ஊராட்சி மன்ற அலுவலர் உள்ளிட்ட பலரிடமும் புகார் அளித்தும் பலனில்லை என வேதனை தெரிவித்த மக்கள், தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளனர்.
Next Story
