மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா - தடை விதிக்க மறுப்பு

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 29 ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கும்பாபிஷேகத்துக்கு தடை விதிக்க கோரி, தமிழ்நாடு திருக்கோவில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்படும் என அறநிலைய துறை உறுதி அளித்தது.

மேலும், கோயில் ஊழியர்களை வைத்தே கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறும் என்றும், கும்பாபிஷேக நிகழ்வு நேரடியாக யூ-டியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் எனவும், அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையேற்ற நீதிபதிகள், கும்பாபிஷேக விழாவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பின்பற்ற அறிவுறுத்தியதோடு, விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com