சாலைகளை தோண்டி எடுக்காமல், அதன் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக வரும் 28ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் நெடுஞ்சாலை துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், மயிலாடுதுறையில் சாலை அமைப்பதை ஆய்வுசெய்ய கோரி தாக்கல் செய்த மனுவை அன்றைய தினத்திற்கே, ஒத்திவைத்தனர்