Mayiladuthurai | ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தஅரசு பேருந்து நடத்துநர் | மயிலாடுதுறையில் அதிர்ச்சி
Mayiladuthurai | ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த அரசு பேருந்து நடத்துநர் | மயிலாடுதுறையில் அதிர்ச்சி #mayiladuthurai #crime #TNPolice #thanthitv மயிலாடுதுறையில் அரசு பேருந்து நடத்துநர் வெட்டிக்கொலை மயிலாடுதுறை அருகே ஆனந்தாண்டவபுரம் பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநரும், தொ.மு.ச. நிர்வாகியுமான தமிழ்ச்செல்வன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மகனான தமிழ்ச்செல்வன், வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆனந்தாண்டவபுரம் ரயில்வே கேட் அருகே ஆற்காடு சாலையில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசுப் பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்து அவரது ஊர் மக்கள் மருத்துவமனையில் திரண்டு காவல்துறையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காகப் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
