Mayiladuthurai | ஊசி போட்ட 27 பேருக்கு நடுக்கம் | பரபரப்பான சீர்காழி மருத்துவமனை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில், ஊசி போடப்பட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 27 பேருக்கு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் உடனே மாற்று ஊசி செலுத்தப்பட்ட நிலையில், 20-க்கும் மேற்பட்டோரின் உடல்நிலை சீரானது. மேலும் இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். போடப்பட்ட மருந்து மற்றும் ஊசிகளை ஆய்வு செய்த பிறகே, நடந்தது தெரியவரும் என அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com