மகப்பேறு மருத்துவமனையில் தீ விபத்து - உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை திருவல்லிக்கேணியில் தீ விபத்து ஏற்பட்ட கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை திருவல்லிக்கேணியில் தீ விபத்து ஏற்பட்ட கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மருத்துவமனை இயக்குனர் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீ விபத்தின் போது குழந்தைகளை பத்திரமாக மீட்ட செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
