தந்தி டிவி செய்தி எதிரொலி.. நேரடியாக ஆய்வு செய்து உடனடி ஆக்ஷன் எடுத்த அமைச்சர் | DMK
சேலம் அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில், குடிநீர் வசதி இல்லாமல் கர்ப்பிணிகள் அவதிப்படுவதாக தந்தி டிவியில் செய்தி வெளியான நிலையில், அங்கு ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம் செயல்படும் நான்கு தளங்களிலும் குடிநீர் வசதி இல்லை என நோயாளிகள் வேதனை தெரிவித்தது குறித்து, தந்தி டிவியில் செய்தி ஒளிப்பரப்பானது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நேரடியாக ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உரிய நடவடிக்கை எடுக்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினார்.
Next Story
