அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 6 பேர் பத்திரமாக மீட்பு
சென்னை தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமச்சந்திரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவிய நிலையில், 8 வாகனங்களில் 60க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மூன்றாவது தளத்தில் இருந்த மக்களை மீட்க முடியாததால், கிண்டியில் இருந்து ஸ்கைலிப்ட் வரவழைக்கப்பட்டு, மொட்டை மாடியில் இருந்தவர்களை மீட்டனர். 3வது மாடியில் தவித்த வயதானவர்கள் 2 பேரை, ஜன்னல்களை வெல்டிங் மூலம் உடைத்து பத்திரமாக மீட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
Next Story
