வெளிச்சத்திற்கு வந்த அண்ணாநகர் சம்பவம்-மசாஜ் சென்டர்கள் பற்றி நீதிமன்றம் பரபரப்பு கருத்து
சென்னை அண்ணாநகரில் உள்ள மசாஜ் செண்டர் ஒன்றில் சட்ட விரோதமாக பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தப்பட்ட பெண்களை மீட்டு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், மசாஜ் செண்டர்களில் காவல்துறை சோதனை நடத்துவதற்காக நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவு மீறப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரின் உரிமையாளர் ஹேமா ஜுவாலினி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பிலிருந்து வீடியோ ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தார்.
Next Story
