kovilpatti அதிகாலையில் இறங்கிய முகமூடி கும்பல்-யார் இவர்கள்? அதிர்ச்சி வீடியோ...அச்சத்தில் மக்கள்

அதிகாலையில் இறங்கிய முகமூடி கும்பல்-யார் இவர்கள்? அதிர்ச்சி வீடியோ...அச்சத்தில் மக்கள்

அதிகாலையில் இறங்கிய முகமூடி கும்பல்... யார் இவர்கள்? அதிர்ச்சி வீடியோ... அச்சத்தில் மக்கள் கோவில்பட்டி பகுதியில் அதிகாலையில் முகமூடி அணிந்து சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சிகளை பார்க்கலாம்.. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, சாலைப்புதூர் மீனாட்சி நகர் பகுதியில், அதிகாலை முகமூடி அணிந்த ஆறு மர்ம நபர்கள் சுற்றித்திரிந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளையும் அவர்கள் நோட்டமிட்டுள்ளனர். இந்த காட்சிகள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மர்ம நபர்கள் வீடுகளில் திருட திட்டமிட்டார்களா? அல்லது வேறு எதுவும் நோக்கமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் அப்பகுதியில் சுற்றி திரிந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com