

கரூர் மாவட்டம் மணவாசி டோல்கேட்டில் கட்டணம் செலுத்தும் வழியாக பாலபாரதியின் கார் சென்றுள்ளது. அப்போது, முன்னாள் எம்எல்ஏவின் கார் என ஓட்டுநர் குறிப்பிட்ட நிலையில், முன்னாள் எம்எல்ஏ-க்கு இலவச அனுமதி கிடையாது, கட்டணம் செலுத்தி விட்டு செல்லுங்கள் என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் பாலபாரதி உடன் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் பற்றி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாலபாரதி, பேசிக்கொண்டிருந்தபோதே ஒருவர் துப்பாக்கியை எடுத்துவந்து மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். டோல்கேட்டில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கரூர் மாவட்ட ஆட்சியர் அப்புறப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.