``ஏன்டா இதெல்லாம் ஒரு குத்தமா?’’ - மணப்பெண் அத்தை மகனை புரட்டி எடுத்த மாப்பிள்ளை வீட்டார்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் திருமண விழாவில் ஏற்பட்ட தகராறில், கடையில் வைத்து ஒருவரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த நிதிஷ் என்பவரின் அத்தை மகளுக்கு 2 தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது மாப்பிள்ளையின் உறவினர்கள் நடனமாடி கொண்டிருந்த போது, நிதிஷ் பாட்டை ஆப் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிதிஷை ஒரு கடையில் வைத்து மாப்பிள்ளையின் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
