மெரினாவில் குதிரை சவாரிக்கு தடை - போலீசார்அதிரடி

சுற்றுலா வந்த பெண்ணிடம் அதிக பணம் கேட்டு தகராறு செய்ததால், சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி தடை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக மெரினா கடற்கரையில் சிறியவர்களுக்கு 100 ரூபாயும், பெரியவர்களுக்கு 200 ரூபாயும் குதிரை சவாரிக்கு வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், சுற்றுலா வந்த பெண்ணிடம், சேப்பாக்கத்தை சேர்ந்த தேவா என்பவர், நபர் ஒருவருக்கு 200 ரூபாய் என கூறிவிட்டு, 800 ரூபாய் கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் மெரினாவில் குதிரை சவாரியை தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com